தமிழ் சினிமாவை மதிக்கவில்லையா விஜய், இயக்குனர் தயாரிப்பாளர் கோபம்

விஜய் பேசும் போது கூட சத்தம் போட்டு பேசமாட்டார், எப்போது அமைதியாக இருக்கு அவர் தற்போது முருகதாஸின் அதிரடி கதை ஒன்றில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சன் பிச்சர்ஸ் தொலைக்காட்சி ஆபிஸிலேயே நடந்தது.

தற்போது சினிமாவை சார்ந்த அனைவரும் ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது, விஜய் படம் மட்டும் விக்டோரியா ஹாலில் ஸ்பெஷல் அனுமதி வாங்கி எடுக்கப்பட்டு வருகின்றதாம்.

இதனால், கோபமடைந்த இயக்குனர் வெங்கடேஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் ஸ்ட்ரைக்கில் கூட பாகுபாடா என்று கோபமாக கேட்டுள்ளார்.

இவர் மட்டுமின்றி பிரபல தயாரிப்பாளரான ஜே.கே. சதீஷ் தன்னுடைய டுவிட்டரில், விஜய் படப்பிடிப்பு இன்றும் நடந்து வருகிறது, ஒற்றுமை எங்கே இருக்கிறது. அவருக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி கிடைத்தது, இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் என்னென்ன பிரச்சனைகள் வந்தது என்பது நமக்கே தெரியும். தற்போது பிரச்சனைகள் இன்னும் முடியாமல் பல போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.