விஜய்யின் புதிய வீட்டில் தன் குழந்தைகளுக்காக என்னென்ன செய்துள்ளார் தெரியுமா?

விஜய் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல தந்தையும் கூட. தன் மகன், மகளுக்காக பல வசதிகளை செய்து கொடுத்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது நீண்ட வருடங்கள் இருந்த நீலாங்கரை வீட்டை விஜய் காலி செய்துள்ளார், காலி செய்து விட்டு பனையூர் பக்கம் சென்றுள்ளார்.

ஏனென்றால் நீலாங்கரையில் உள்ள தன் வீட்டை முற்றிலுமாக மாற்றி வருகின்றார் விஜய், தன் மகன், மகள் இருவருமே வளர்ந்துவிட்டனர்.

அவர்கள் தேவை அறிந்து அதற்கு ஏற்றார் போல் தன் வீட்டை விஜய் மாற்றி வருவதாக கூறப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக விஜய்யின் மகள் சாஷா பள்ளியில் பேட்மிட்டன் வீரர், அவரின் பேட்டமிட்டன் பயிற்சிக்காக வீட்டிற்குள்ளேயே அதற்கு சிறப்பு வசதிகள் விஜய் செய்து தந்துள்ளாராம்.

இது மட்டுமின்றி தன் மகன் மிக விரைவில் சினிமாவிற்கு வந்தாலும் வரலாம், அதற்காக வீட்டிற்குள்ளே நடன பயிற்சி எடுக்க ஒரு சிறப்பு அறையையும் உருவாக்கி கொடுத்துள்ளாராம்.