தேசிய விருது வாங்கிய படத்தில் நடிக்க மறுத்த விஜய், ரசிகர்களின் ஆதங்கம்

விஜய் எப்போதும் மாஸ் மசாலா படங்களில் தான் நடிப்பார், அதையே தான் அவருடைய ரசிகர்களும் விரும்புவார்கள், ஆனால், அவருக்கே ஏதாவது மாற்றம் வேண்டும் என்று நினைப்பாராம்.

அதனால் தான் முன்பெல்லாம் என்ன தான் ஆக்‌ஷன் படங்களில் நடித்தாலும் அவ்வபோது காவலன், சச்சின் போன்ற காதல் படங்களில் நடித்து அசத்துவார்.

அந்த வகையில் விஜய் பல வருடங்களுக்கு முன்பே ஒரு தேசிய விருது வாங்கிய படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால், அந்த நேரத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் தான் அந்த படம், இப்படம் முதலில் விஜய்க்கு தான் வந்ததாம், கதையெல்லாம் கேட்டு கடைசியில் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம்.

இப்படம் தேசிய விருது வாங்கியதுடன், வசூலிலும் சக்கை போடு போடு போட்டது, சேரன் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த படம் ஆட்டோகிராப் தான்.

இந்த படத்தில் நம்ம தளபதி நடித்திருந்தால் தேசிய விருது வாங்கிய படத்தில் நம் தளபதி இருந்திருப்பாரே என்று தளபதி ரசிகர்களுக்கு ஓர் ஆதங்கம் உள்ளது.