பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இவரா? ரசிகர்கள் உற்சாகம்

மக்கள் எப்போதும் எதாவது வித்தியாசமான நிகழ்ச்சியை தான் விருபுவார்கள், அதிலும் அந்த நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக இருக்க வேண்டும்.

அதை தான் இந்த வேகமான உலகமும் விரும்புகின்றது, அதற்கு ஏற்றார் போல் தான் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சியை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் கடந்த வருடம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்றது பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது.

அடுத்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க இருப்பது சூர்யா, அரவிந்த் சாமி என நடிகர்கள் பெயர் இடம்பெற்றது.

ஆனால் தற்போது வந்த தகவல்படி, கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்ச்சி அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மேலும் உதவியாக தான் இருக்க போகின்றது, ஆனால், கமல் இனி பிக்பாஸ் தொகுத்து வழங்கமாட்டேன் என்று கூறியதும் கவனிக்கத்தக்கது.