ஜிகர்தண்டா பட வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்: இப்படி ஒரு காரணம் சொன்னாரா

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் தான் விஜய், ரஜினிக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார் என சினிமா விநியோகஸ்தர்களே சொல்லும் அளவுக்கு அவர் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.

பிரின்ஸ் தோல்வி

வெற்றி தோல்விகளை தாண்டி தற்போது சிவகார்த்திகேயனுக்கு என்று கோலிவுட்டில் ஒரு மார்க்கெட் இருக்கிறது. இருப்பினும் பிரின்ஸ் படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி தோல்வி அடைந்ததால் அடுத்து ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அவர்.

அவர் நடிப்பில் அடுத்து அயலான் படம் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. அது தாமதம் ஆனால் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் மாவீரன் படத்தில் தான் அவரை பெரிய திரையில் பார்க்க முடியும்.

Still from Jigarthanda movie

ஜிகர்தண்டாவை நிராகரித்தது ஏன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ல் வெளிவந்து ஹிட் ஆன ஜிகர்தண்டா படத்தில் முதலில் சிவகார்த்திகேயனை தான் நடிக்க கேட்டார்களாம். ஆனால் கதை கேட்டுவிட்டு அவர் ஒரு கண்டிஷன் போட்டாராம்.

வில்லன் ரோலுக்கு பாபி சிம்ஹா வேண்டாம், அவருக்கு பதில் சத்யராஜ் போன்ற பெரிய நடிகர் யாரையாவது போடுங்க என கூறினாராம்.

கார்த்திக் சுப்புராஜ் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அதற்கு பிறகு சித்தார்த் அந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார். பாபி சிம்ஹாவை சிவகார்த்திகேயன் குறைத்து மதிப்பிட்டாலும் அவர் இந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார் என்பது தற்போது எல்லோருக்கும் தெரிந்தது தான்.