தளபதி விஜய் விருது விழாவிற்கு வராததற்கு இது தான் காரணமாம்

விஜய் நடிப்பில் மெர்சல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, இப்படத்தின் வெற்றி உலகமே அறியும்.

விஜய் விருது விழாவில் Favorite நடிகர் விருது மட்டும் யாருக்கும் வழங்கப்படவில்லை. விஜய் இந்த விழாவிற்கு வராததால் அந்த விருதை கொடுக்காமலே விட்டனர், இது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த விழா சொன்ன தேதியில் நடக்காமல் திடிரென தள்ளிப்போய் மீண்டும் ஒரு புதிய தேதி அறிவிக்கப்பட்டது. அதனால் தான் விஜய் இதற்கு நேரம் ஒதுக்கமுடியாமல் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் விஜய் தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சி தயாரிக்கும் படத்தில் தான் நடித்து வருகிறார். அவர்கள் கொடுத்த அழுத்தம் தான் விஜய் விருது விழாவில் கலந்துகொள்ளாமல் அவர் புறக்கணிக்க காரணம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.