அஜித் லைனில் நிற்க மாட்டாரா? சண்டை போட்ட பெண்! – வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் எப்போதும் தேர்தலில் வாக்களிக்கும்போது வரிசையில் நின்று வாக்களிப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். அவர் போல எளிமையாக இருக்கவேண்டும் என்று தான் பலரும் கூறிவந்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் (ஏப்ரல் 18ம் தேதி) நடந்த தேர்தலில் அஜித் காலையிலேயே வாக்களிக்க மனைவி ஷாலினியுடன் வந்தார்.

அவரை பார்க்கவே அதிக கூட்டம் வந்திருந்தது. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் வந்ததால் போலீசார் அஜித்தை வரிசையில் நிற்காமல் நேராக சென்று வாக்களிக்க வைத்தனர்.

அஜித் வரிசையில் நிற்காததை பார்த்த பெண் ஒருவர் அஜித்தை கைகட்டி எதோ திட்டியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.