திருமணம் எப்போது? நடிகர் யோகி பாபு கூறியுள்ள பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் நடிகர் யோகி பாபு. அவரின் கைவசம் எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. டாப் ஹீரோக்கள் படங்கள் உட்பட அவர் அதிகம் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அவரிடம் திருமணம் எப்போது என ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். அதற்கு என்ன பதில் அளித்துள்ளார் என நீங்களே பாருங்கள்..

“திருமணம் நடக்கும் போது கண்டிப்பாக கூறுவேன், என் அம்மா பெண் பார்த்துள்ளார் போல் தெரிகிறது, அதற்காக தான் வீட்டிற்கு வந்துள்ளார். விசேஷம் என்றால் கண்டிப்பாக கூறுவேன்” என யோகிபாபு தெரிவித்துள்ளார்.