சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் அனாதையாக இருக்கும் இந்திய சினிமாவின் முன்னணி நாயகி

ஹீரோயின்கள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது, அவர்களை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கும்.

அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கை மிகவும் மோசமானதாகவே உள்ளது, மார்க்கெட் இருக்கும் வரை தான் மதிப்பார்கள்.

ஒரு கட்டத்தில் சீரியலில் கூட கண்டுக்கொள்ளாமல் இருந்த இடம் தெரியாமல் காணமல் போன நாயகிகள் பலர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இவர் வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களில் அதிகம் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த அவருக்கு டிபி நோய் வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள செவ்ரி டிபி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதை தெரிந்து கொண்ட பூஜா கணவர் மற்றும் குடும்பத்தினர் நடிகையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதனை எதிர்ப்பார்க்காத பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வருகிறார். மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

நோய்யில் பரிதவித்து வரும் பூஜா தனக்கு உதவி செய்யுமாறு நடிகர் சல்மான் கானிடம் ஒரு வீடியோ மூலம் உதவி கேட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக கூறிவருகிறார்.