வாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்துக்கொள்ளும் நடிகைகள்- வெளியிட்ட பிரபல தயாரிப்பாளர் மனைவி

சினிமா என்றாலே சர்ச்சைகள் நிகழ்ந்ததாக தான் இருக்கும், அப்படித்தான் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மனைவி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

இதில் அவர் கூறுகையில் சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்கள் குறி. அதனால் பல குடும்பம் உடைகிறது.

அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட்டு சினிமா துறையில் இருந்து வெளியேற்றுவேன் என முதலில் நேஹா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

உங்கள் கணவருக்கு தான் அப்படி நடந்ததா? என பலரும் கேட்டதால், கொஞ்ச நேரம் கழித்து அதை நீக்கிவிட்டார்.

மீண்டும் சுசிலீக்ஸ் போன்ற புதிய லீக்ஸ் வரப்போகிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால், இந்த சர்ச்சை பற்றி நேஹா ஞானவேல்ராஜா மற்றொரு டீவீட்டில் விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கும் என கணவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வளவு சென்சிடிவ்வான ஒரு விஷயத்தை நான் பொழுதுபோக்குக்காக செய்யவில்லை என கூறியுள்ளார்.