வீடியோ: படகு வீட்டில் காதலருடன் அமலா பால்! லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பா?

நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர் சில வருடங்களிலேயே அவரை பிரிந்துவிட்டார். சட்டப்படி அவர்கள் விவாகரத்தும் பெற்றுவிட்ட நிலையில் சமீபத்தில் இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தானும் ஒருவரை காதலித்து வருவதாக அமலா பால் அறிவித்துள்ளார். ஆனால் அது யார் என்பதை இதுவரை வெளிக்காட்டவில்லை.

இந்நிலையில் தற்போது அமலா பால் கேரளாவில் தன்னுடைய காதலருடன் சுற்றுலா சென்றுவருகிறார். அங்கு ஹோட்டல் அறையில் இருக்கும்போது காதலர் எடுத்த விடியோவை அமலா பால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஒருவேளை இவர்கள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களோ??