சமீப காலமாக திரையுலகத்தினர் பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றனர். அதிலும் தொடர் நடிகைகள் தற்கொலை நடந்து தான் வருகின்றது.
நடிகைகளுக்கு பல விதத்தில் பிரச்சனைகள் வந்துக்கொண்டே இருக்கின்றது, அந்த வகையில் சினிமா நடிகைகளை தாண்டி ரசிகர்கள் அதிகம் விரும்புவது தொலைக்காட்சி நடிகைகளை என்று கூறலாம். அப்படி தொலைக்காட்சி பிரபலங்களுக்கு ஏதாவது நடந்தால் அதை கேட்டு ரசிகர்கள் வருத்தப்படுவர்.
அப்படி தெலுங்கு சினிமாவில் பிரபல தொகுப்பாளினி ராதிகா ரெட்டி ஏப்ரல் 1 நேற்று 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அதோடு தான் இறப்பதற்கு என்ன காரணம் என்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில் அவர், மன அழுத்தம் காரணமாக நான் என்னை கொலை செய்கிறேன், யாரும் இதற்கு காரணம் இல்லை. என்னுடைய மூளையே எனக்கு எதிரி என்று எழுதியுள்ளார்.
ராதிகா ரெட்டி கடந்த 6 மாதத்திற்கு முன் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோர்களுடன் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு 14 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.