மேடையில் அத்தனை பேர் முன்பும் இப்படி சொல்லிவிட்டாரே ஆண்ட்ரியா, விஜய் ரசிகர்கள் கோபம்

ஆண்ட்ரியா ஆங்கில இந்தியன் பெண்ணாக இருந்தாலும் தமிழ் பெண்ணாக எல்லோர் மனதையும் கவர்ந்தவர், ஒரு முன்னணி ஹீரோயினாக ஆக வேண்டும் என்று சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்.

அந்த தருணத்தில் கூட ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர், இதுமட்டுமின்றி ஆண்ட்ரியாவின் குரலுக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

அந்த அளவிற்கு அழகாக பாடக்கூடியவர், இவர் மங்காத்தா, அரண்மனை, ஆயிரத்தில் ஒருவன், வலியவன் என பல படங்களில் நடித்துள்ளார்.

Andrea Jeremiahஆனால், தரமணி படம் தான் ஆண்ட்ரியாவிற்கு பெரும் புகழை தேடி தந்தது, இப்படம் இவரின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஆண்ட்ரியா ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு மாணவர்கள் அனைவரும் உங்களுக்கு தல பிடிக்குமா, தளபதி பிடிக்குமா? என்று கேட்டனர்.

அதற்கு ஆண்ட்ரியா சற்றும் யோசிக்காமல் தல தான் என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது, ஆனால், இவை விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது.

விஜய்யுடன் ஆண்ட்ரியா கூகுள் கூகுள் பாடலை இணைந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆண்ட்ரியா இனி ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூட சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.