ஸ்ரீதேவி மகள் ஜான்வி வாழ்க்கையில் மீண்டும் இப்படி ஒரு சோகமா?

ஸ்ரீதேவி இந்திய திரையுலகில் கொடிக்கட்டி பறந்தவர், இவர் இருந்து வரை இவருக்கு நிகராக எந்த ஹீரோயினும் அப்போது போட்டி போட முடியவில்லை.

இவரின் இழப்பு ஒட்டுமொத்த திரையுலகத்தினருக்கும் வருத்தம் தான், எல்லோருமே இதன் மூலம் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் என்ன தான் ஆறுதல் சொன்னாலும் ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு இன்னுமே அவர் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வரவில்லையாம்.

தற்போது மீண்டும் தான் நடித்து வரும் முதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளும் ஜான்வி, கொஞ்சம் சோகத்தில் தான் உள்ளாராம்.

அம்மா இறந்த சோகம் போக, சினிமாவில் தன் அம்மா மாதிரி தன்னால் ஜொலிக்க முடியுமா? என்று கொஞ்சம் பதட்டம் கலந்த சோகத்தில் உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் ரன்வீர் சிங் நடித்து வரும் சிம்பா படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடிக்கவிருந்தது, ஒரு சில காரணங்களால் இவரை அதிலிருந்து நீக்க, இந்த செய்தி ஜான்வியை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவருக்கு பதிலாக தற்போது அந்த கதாபாத்திரத்தில் சயிப் அலிகான் மகள் நடிக்கபோகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.