சின்னத்திரை தொகுப்பாளர் டிடிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

தொகுப்பாளர் டிடி தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் வைத்திருப்பவர். இவர் ஷோவிற்கு என பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

நடுவில் தொலைக்காட்சிகளில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்த டிடி இப்போது பிஸியாகிவிட்டார். விருது விழா, படங்களின் ஆடியோ வெளியீடு போன்றவற்றில் அவர் பிஸியாக கமிட்டாகி வருகிறார்.

இந்த நேரத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்களால் விரும்பத்தக்க பிரபலம் யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். அதில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் டிடி. இந்த தகவல் பிரபலங்களுக்கு தெரியவர அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இவரை தொடர்ந்து முதல் 10 இடங்களை பிடித்த பிரபலங்களின் விவரம் இதோ

திவ்யதர்ஷினி
கீர்த்தி
நக்ஷத்ரா
ரம்யா
வாணி போஜன்
சைத்ரா ரெட்டி
ஆல்யா மானசா
சரண்யா
அஞ்சனா
நித்யா ராம்