பிரியங்கா சோப்ராவிற்கு கல்யாணம் முடிந்துவிட்டதா? – நடிகை விளக்கம்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டார். அவர் நடித்துவரும் குவான்டிகோ சீரியலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

35 வயதாகியும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தன் கையில் பிரேஸ்லெட் போன்ற மங்கள்சூத்ரா உள்ளதாக கூறி அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது என தகவல் பரவியது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா இதுபற்றி டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அந்த ப்ரேஸ்லெட்டை புகைப்படம் எடுத்து ‘இது சாதாரணஒன்று’ என்று கூறியுள்ளார்.

எனக்கு திருமணம் நடக்கும்போது நிச்சயம் அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.