ஜோதிகாவிற்கு இப்படி ஒரு சோகமா?

ஜோதிகா தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரில் ஆரம்பித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் வரை நடித்து அசத்தியவர், இவர் கொடுக்காத ஹிட் படங்களே இல்லை.

அந்த வகையில் ஜோதிகா நல்ல பீக்கில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.

ஆனால், அவருக்குள் இருந்த நடிப்பு தாகம் மீண்டும் அவரை திரையில் கொண்டு வந்தது, நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் நடித்த 36 வயதினிலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவை கலக்குவார் என்று எதிர்ப்பார்க்க படம் நன்றாக இருந்தும் மகளிர் மட்டும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதை தொடர்ந்து நாச்சியார் படத்தை மிகவும் நம்பியிருந்தார், கண்டிப்பாக இந்த படம் தன் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என அவர் எண்ணினார்.

அதேபோல் தான் ஜோதிகாவிற்கு இப்படம் நல்ல பெயரை வாங்கி தந்தாலும், விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது, இதனால், ஜோதிகா கொஞ்சம் வருத்தத்தில் தான் உள்ளாராம்.