மெர்சல் இப்படியாகும் என்று தெரிந்து தான் நடித்தேன்! காஜல் அதிரடி பேட்டி

காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை, இவர் இதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் தமிழில் விஜய்யுடன் மட்டுமே 3 படங்களில் நடித்துள்ளார், இதில் துப்பாக்கி, மெர்சலும் மெகா ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மெர்சல் படத்தில் காஜலுக்கு நடிப்பதற்கு பெரியளவிற்கு இடமில்லை, இருந்தாலும் அவர் நடிக்க சம்மதித்தார்.

இதுக்குறித்து அவர் பேசும் போது மெர்சல் படத்தின் கதையை அட்லீ என்னிடம் சொல்லும் போதே நான் முடிவு செய்துவிட்டேன்.

என்னுடைய கதாபாத்திரம் குறைந்த நேரம் வந்தாலும், படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் உடனே சம்மதம் தெரிவித்து விட்டேன்.

அதை விட அட்லீ படத்தில் நடிக்க வேண்டும், அதோடு விஜய் சாருடன் 3வது முறையாக நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் சம்மதித்தேன் என காஜல் கூறியுள்ளார்.

காஜல் தற்போது பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன குயின் படத்தின் ரீமேக்கில் தமிழில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.