பட வாய்ப்பு இல்லாததால் இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டாரே காஜல்??

நடிகைகள் என்றாலே எப்போதும் மார்க்கெட் இருக்கும் வரை தான், அவர்கள் மார்க்கெட் குறைந்து விட்டார் திருமணம் சீரியல் என்று செட்டில் ஆகிவிடுவார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகராவால். இருப்பினும் அவருக்கு டாப் ஹீரோக்களின் படங்கள் கிடைப்பது குறைந்துவிட்டது.

அதனால் இனி சின்ன ஹீரோக்களின் படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம். ஏற்கனவே நடிகை ஹன்சிகா இப்படி செய்துவருவது குறிப்பிடத்தக்கது. முன்னணியில் இருந்த அவர் தற்போது உதயநிதி, ஜீவா என சின்ன நடிகர்களின் படங்களில் தான் தற்போது நடித்துவருகிறார்.

ஆனால் காஜல் அகர்வால் இயக்குனர்களுக்கு ஒரு கண்டிஷன் வைத்துள்ளாராம். தன்னுடைய ரோலுக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வேன் என்று முடிவெடுத்துள்ளார்.