ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் அதிகம் பிரபலமானவர் ஜூலி. அந்த நிகழ்ச்சியில் அவர் நடந்துகொண்ட விதத்தால் அவரை அனைவரும் வெறுக்க துவங்கினர்.
இந்நிலையில் ஜூலி அரசியல் கட்சி துவங்கவுள்ளதாக வீடியோ வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் டுவிட்டரில் ஜுலி மக்கள் இயக்கம் என்ற பெயரில் இருக்கும் பக்கத்தில் நடிகை கஸ்தூரியை டேக் செய்து, நீங்களும் ஜுலியுடன் அரசியலில் இறங்கினால் உங்களை நாங்கள் முதலமைச்சர் ஆக்குவோம் என கூறியிருந்தனர்.
அதை பார்த்த கஸ்தூரி “ஜூலி அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை” என பதில் அளித்துள்ளார். “தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு…” என அவர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு….
— kasturi shankar (@KasthuriShankar) May 21, 2018