முன்னணி நடிகருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அடித்தது யோகம்

கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் அவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா முடிந்த பின் மீண்டும் துவங்கவுள்ளது.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுடன் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளாராம்.

கவுதம் மேனன் இயக்கத்தில் 2006 ல் வந்த வேட்டையாடு விளையாடு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் கமலுடன் கமாலினி முகர்ஜி, ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி என பலர் நடித்திருந்தனர்.

ஊரடங்கு முடிந்த பின் கமல்ஹாசன் இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் படங்களை முடித்துவிட்டு வேட்டையாடு விளையாடு 2 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.