எல்லோர் முன்னிலையிலும் தன் காதலை பிரபலத்திடம் சொன்ன கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த மகாநதி செம்ம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு விருது விழாவில் கலந்துக்கொண்டார்.

அதில் பிரபல தெலுங்கு தொகுப்பாளர் ப்ரதீப் கீர்த்திக்கு ஒரு டப்மாஷ் போல் ஒரு டாஸ்க் கொடுத்தார்.

அந்த டப்மாஷில் கீர்த்தி ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல உடனே, ப்ரதீப் ‘ஓகே கீர்த்தி ஐ டூ லவ் யூ’ என்று சொல்ல மேடையே அதிர்ந்தது.

கீர்த்தியும் என்ன செய்வது என்று புரியாமல் ‘இதெல்லாம் உண்மை இல்லை, சும்மா’ என்று கூறிக்கொண்டே இருந்தார்.