ரூ 200 கோடி பட்ஜெட்டில் நயன்தாரா, ஒரு ஹீரோயினாக அடுத்தக்கட்ட லெவல்

நயன்தாரா படம் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது, அந்த அளவிற்கு கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

ஒரு ஹீரோயினாக மாயா, அறம், டோரா என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர் அடுத்து அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகின்றார்.

இதில் குறிப்பாக கோலாமாவு கோகிலா, கொலையுதிர் காலம், அறிவழகன் படம் தாண்டி, அஜித்தின் விசுவாசம் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் இவர் அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் பிரமாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார், அப்படத்தில் இவர் ராணியாக நடிக்க அதற்காக தன் தோற்றத்தை மாற்றி வருகின்றார்.

படத்தில் இவருக்கு எப்படியும் கத்திச்சண்டை எல்லாம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இப்படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடி வரை இருக்கும் என தெரிகின்றது.

மேலும், இதில் அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கவுள்ளதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா அடுத்த வாரம் கலந்துக்கொள்ளவுள்ளார், அதை தொடர்ந்து விசுவாசம் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளாராம்.

கண்டிப்பாக ஒரு ஹீரோயினாக நயன் தாராவின் திரைப்பயணத்தில் இவை அடுத்தக்கட்டம் தான் என கூறப்படுகின்றது.