அஜித்திற்காக தன் காதல் பிரச்சனையையே கண்டுக்கொள்ளாத நயன்தாரா

நயன் தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவருக்கு ஒரு ஹீரோக்கு நிகரான மாஸ் பேன் பாலோயிங் உள்ளது.

நயன் தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே, ஆனால், அதற்கு முன் அவர் இரண்டு முறை காதல் தோல்வியடைந்தவர்.

ஆம், நடிகர் சிம்புவுடன் சில வருடங்களில் காதலில் இருந்து பிரிந்த இவர், பிரபுதேவாவுடன் திருமணம் வரைக்குமே சென்று விட்டார்.

பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை இவர்கள் பிரிந்தனர், இந்நிலையில் இவர் மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

அஜித் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் நயன்தாராதான் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஒருகாலத்தில் பிரபுதேவா-நயன்தாரா காதலித்து வந்த நிலையில் இருவரும் பின்னர் பிரிந்துவிட்டனர்.

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலிக்கிறார். அப்படி இருக்க அவர் எப்படி பிரபுதேவா படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் புரொபஷனல் வேறு, பர்ஷனல் வேறு என்பதால் தான் அவர் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்தார். அதனால் நிச்சயம் பிரபுதேவா இயக்கும் அஜித் படத்திலும் அவர் நிச்சயம் நடிப்பார் என நயன்தாரா தரப்பு தெரிவித்துள்ளது.