சின்னத்திரை தான் தற்போது வெள்ளித்திரையை விட ரசிகர்களிடம் மிகவும் பிரபலம், மிக எளிதில் சாமனிய மக்களை சென்று அடைந்து விடுகின்றது.
அந்த வகையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்த சீரியலில் அமித், நிஷா, சரண்யா என மூவறும் முக்கிய நடிகர்களாக நடித்து வருகின்றனர். மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் இருந்து நடிகை நிஷா வெளியேறிவிட்டார்.
எதனால் சீரியலில் இருந்து வெளியேறினேன் என்பது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஆரம்பத்தில் தன்னுடைய கதாபாத்திரம் நல்ல விதமாக இருந்தது என்றும் போக போக அதை நெகட்டீவ் வேடமாக எழுத்தாளர்கள் அமைக்கிறார்கள்.
அவர்களின் வேலையில் நாம் குறை கூட முடியாது, தனக்கு இப்படி நடிக்க சரிபட்டு வரவில்லை என்பதால் சந்தோஷமாக சீரியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.