உடல்எடை குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்

நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து வருகின்றார், சுதீப்பிற்கு ஜோடியாக கன்னட படம் ஒன்றில் கூட நடித்து விட்டார்.

இந்த நிலையில் நித்யா மேனன் உடல் எடை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகின்றது, ஆனால், அவர் அதை பெரிதும் பொருட் படுத்தவில்லை.Nithya Menen

அது மட்டுமின்றி மெர்சல் படத்தில் எடை அதிகம் தெரிந்தாலும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள தான் பட்டார்.

அப்படத்திலேயே விஜய்க்கு பிறகு அதிகம் ரசிகர்களை கவர்ந்தது இவர் தான், இந்நிலையில் நித்யா மேனன் தற்போது அதிகம் வெயிட் போட்டுள்ளார்.

இதை பலரும் கிண்டல் செய்து வர, நித்யா மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதில் ‘ஒருநாளும் என் வெயிட் எனக்கு மைனஸாக இருந்தது இல்லை, மேலும், இது அவ்வளவு பெரிய விஷயமும் இல்லை.

கதைக்கு தேவை என்பதால் தான் அப்படி இருந்தேன், தற்போது வரும் படங்களில் வெயிட் குறைந்தே காணப்படுவேன்’ என்று கூறியுள்ளார்.