பகல்நிலவு புகழ் ஸ்னேகா குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல், ரகசியம் வெளிவந்தது

வெள்ளித்திரைக்கு வந்தால் மட்டுமே பெரும் ரசிகர்கள் பலம் கிடைக்கும் என்பது போலியாகிவிட்டது, தற்போதெல்லாம் சின்னத்திரையிலேயே பலரும் கலக்கி வருகின்றனர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா என பலரும் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருகின்றனர்.

தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களை எடுத்துக் கொண்டால் இளம் நடிகைகள் நிறைய பேர் நடிக்கிறார்கள்.

அவர்களுக்காகவே இன்றைய கால இளைஞர்கள் கூட சீரியல்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றே கூறலாம். அப்படி ஆல்யா மானசா, சரண்யா, வாணி போஜன், ரச்சிதா என பலரை உதாரணமாக கூறலாம். இவர்களது வரிசையில் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருபவர் பகல்நிலவு சீரியல் புகழ் சினேகா என்கிற ஷிவாணி.

இவரது கண்கள் அழகை வைத்து நிறைய மீம்ஸ்கள் கூட வந்தன. இவர் முதன்முதலாக பகல்நிலவு சீரியல் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் தான் 12வது வகுப்பு இப்போது தான் முடித்துள்ளேன் என்று ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

ஏனெனில் அவர் கல்லூரி படிப்பை எல்லாம் முடித்திருப்பார் என்பது இளைஞர்களின் ஒரு கணிப்பாக இருந்தது. அண்மையில் பள்ளி படிப்பை முடித்துள்ளதாகவும் விரைவில் இந்த சீரியலை அடுத்து நிறைய கமிட் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.