சினேகா பட்ட கடும் கஷ்டங்கள், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் வெளிவந்தது

சினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இதை தொடர்ந்து இவர் நடிகர் ப்ரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

இவர்கள் அனைவரும் விரும்பு ஆதர்ஸ தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சினேகா-பிரசன்னா ஜோடி ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிரசன்னா, சினேகா மட்டுமில்லை நான் அனைத்து பெண்களையும் அதிகம் மதிக்கிறேன். குழந்தை பெற்றெடுக்கும் போது அவர்கள் படும் வலியை நேரில் பார்த்ததால் தான்.

சினேகா பிரசவத்தின் போது நார்மல் டெலிவரி ஆகவில்லை, அதனால் வலியை அதிகரிக்க ஒரு இன்ஜெக்ஷன் போட்டார்கள். அதை பார்த்ததும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.. அவ்வளவு பெரிய நீடில்.

சும்மா தலைவலி வந்தாலே தாங்க முடியாது, ஆனால் இந்த வலியை ஒவ்வொரு அம்மாவும் எப்படி தாங்கினார்கள் என நினைத்தால் அவர்களை தெய்வமாக மதிப்போம் என கூறினார்.