ரகசியமாக டேட்டிங் சென்ற பிரியங்கா சோப்ரா – வீடியோ லீக் ஆனது

இந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. குவான்டிகோ சீரியல் மற்றும் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துவருகிறார்.

தற்போது 35 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் பரவினாலும் அவர் தன் காதல், திருமணம் பற்றி எப்போதும் மீடியாவிடம் வாய் திறந்ததில்லை.

இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் Nick Jonas என்பவருடன் டேட்டிங் சென்றுள்ளார். இருவரும் ஒன்றாக ஒரு ஃபுட்பால் மேட்ச் பார்க்க சென்றுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.