பிரியங்கா சோப்ராவின் சீரியலுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு! சர்ச்சை வீடியோ உள்ளே

நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது சர்வதேச அளவில் பிரபலமான நடிகை. அவர் ஒரு அமெரிக்க சீரியல் மற்றும் சில ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்துவரும் குவான்டிகோ சீரியலில் வரும் ஒரு காட்சி பெரிய சர்ச்சையில் அவரை சிக்கவைத்துள்ளது.

அமெரிக்காவில் அணு தாக்குதல் நடத்த ஒரு இந்தியர் திட்டமிடுவது போலவும், அதில் பாகிஸ்தானை சிக்க வைக்க முயற்சிப்பது போலவும் காட்டப்படுகிறது. மேலும் அந்த நபர் ருத்ராட்சம் அனிருந்திருப்பதை வைத்து கண்டுபிடிப்பார்கள்.

இந்த காட்சிக்கு இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் பிரியங்கா சோப்ரா பணத்திற்காக இப்படிப்பட்ட காட்சிகளில் ஏன் நடித்தார் என விமர்சித்து வருகின்றனர்.