ஷூட்டிங்கில் சில்மிஷம்! பிரபல தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த ராதிகா ஆப்தே 

இதற்குமுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தற்போது புதிதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதுவரை ஐந்து தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள அவர் ஒரு பிரபல ஹீரோ தனக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாகவும், அதற்காக அவரை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் அறைந்ததாக கூறியுள்ளார்.

“அன்றுதான் ஷூட்டிங்கின் முதல்நாள். அந்த ஹீரோ என் கால்களை வருடி கொண்டிருந்தார். அவரை சந்திப்பது அதுதான் முதல்முறை என்பதால எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டேன்”

என ராதிகா ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
ஆனால் அந்த நடிகரின் பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.