பாலியல் தொல்லைக்கு ஆளான ரெஜினா

ரெஜினா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இவர் கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர். தற்போது தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர்.

அண்மையில் அவர் கௌதம் கார்த்திக் உடன் மிஸ்டர் சந்திரமௌலி படத்திலும் நடித்துள்ளார். சமீபகாலமாக இந்தியா முழுக்க நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகிறது.

ஒருமுறை சென்னையில் முக்கிய தியேட்டர் அருகே தண் நண்பர்களோடு ரெஜினா நடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் எதிரில் வந்த ஒரு நபர் அவரின் உதடுகளை பிடித்து இழுத்தாராம்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர அவருக்கு சில நிமிடங்கள் ஆனதோடு அந்த நபரை ரெஜினா கெட்ட வார்த்தையில் திட்டினாராம். மேலும் இது போல சில சங்கடங்கள் அவருக்கு நடந்து சம்மந்தப்பட்டவர்களுக்கு அடி கொடுத்து அனுப்பியிதாக அண்மையில் கூறியுள்ளார்.