இதனால் தான் விஜய் படம் கிடைத்தது, தளபதி பற்றி கூறி சங்கவி ஏற்படுத்திய பரபரப்பு

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான், மார்க்கெட் முடிந்தால் சீரியல், பிஸினஸ் மேனை திருமணம் செய்வது என செட்டில் ஆகிவிடுவார்கள்.

அந்த வகையில் 90களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் சங்கவி, இவர் அஜித்தின் முதல் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்தவர்.

இதில் குறிப்பாக இவர் விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ளார், மேலும், அந்த காலக்கட்டத்தில் ரசிகர்களின் பேவரட் ஜோடியாக இது இருந்தது.

இந்நிலையில் சங்கவி சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யுடன் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார், இதில் நான் ரசிகன் படத்தில் செம்ம கிளாமராக நடித்தேன்.

அந்த படம் செம்ம ஹிட் ஆக, தொடர்ந்து கிளாமராக நடிக்க வாய்ப்பு வந்தது, அதிலும் இந்த காரணத்திற்காகவே பல விஜய் படங்களில் என்னை கமிட் செய்தார்கள் என்று சங்கவி கூறியுள்ளார்.

மேலும், விஜய்யை ஏதாவது ரீயூனியன் சந்திப்பில் பார்ப்பேன், அஜித்தையெல்லாம் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

இத்தனை வருடம் கழித்து சங்கவி விஜய் படங்கல் குறித்து இப்படி பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.