தமிழ் சினிமாவை அசிங்கப்படுத்திய விக்ரம் வேதா ஹீரோயின்

விக்ரம் வேதா படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஷரதா ஸ்ரீநாத். இவர் இவன் தந்திரன் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஷரதா கன்னட சினிமாவின் மிகவும் உச்ச நட்சத்திரம், இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார்.

அதை விட இவர் கன்னடத்தில் யூ-டர்ன் என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் அவர் தற்போது Milan Talkies என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு கல்லூரி நடிகை வேடம்.

இந்நிலையில் தமிழில் நடித்துவிட்டு ஹிந்தியில் நடிப்பது பற்றி கேட்டதற்கு எனக்கு பெரிய வித்யாசம் தெரிகிறது. பாலிவுட்டில் இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.

இதனால் மறைமுகமாக ஷரதா கோலிவுட்டில் இருப்பவர்கள் ஒழுக்கமில்லாதவர்கள் என்று சொல்கின்றாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.