ஸ்ரேயாவின் கணவரின் உண்மை முகம் இது தான்

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார், அதை தொடர்ந்து சிவாஜி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆகிய படங்களில் நடித்து செம்ம பெயர் பெற்றார்.

இதை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து அப்படியே பாலிவுட் பக்கமும் சென்றார்.

ஆனால், அனைத்து இடங்களிலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது, இதனால் சினிமா உலகிற்கே முழுக்கு போடலாம் என தன் காதலனை கரம் பிடித்தார்.

ஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev பற்றி சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் தேசிய அளவில் பிரபலமான டென்னிஸ் வீரரான அவர் ஒரு தொழிலதிபரும் கூட.

உணவில் அதிக ஆர்வம் கொண்ட Andrei Koscheev முதலில் ஒரு சிறிய ஹோட்டலை திறந்துள்ளார். அதன் பிறகு அதில் அதிக லாபம் கிடைத்ததால் பல பகுதிகளில் தன் ஹோட்டலின் கிளையை தொடங்கி தற்போது நடத்திவருகிறார்.

ஸ்ரேயாவிற்கும் ஹோட்டல் பிஸினஸில் நல்ல ஆர்வம் உள்ளதால் விரைவில் தன் கனவருடன் இணைந்து இதை கவனிக்க உள்ளாராம்.