அரை நிர்வாண போராட்டம் செய்த நடிகை – வீட்டை விட்டு வெளியேற்றம்?

சினிமா என்றாலே எப்போதும் சர்ச்சைக்கும் பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது, அந்த வகையில் சுசீலீக்ஸ் போல் தற்போது ஸ்ரீலீக்ஸ் என்பது உருவாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவே இதைக்கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது, இந்த நிலையில் சமீபத்தில் இவர் செய்த செயல் ஒன்று பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் அதிகமாக உள்ளது. அப்படி படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயர்களை வெளியிட போவதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதற்கு நடுவில் அவர் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் செய்தார். தன்னை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து கொள்ள முடியாது என சொன்னதற்காக இப்படி ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் அப்படி போராட்டம் செய்ததை தொடர்ந்து, ஸ்ரீரெட்டி இருக்கும் வீட்டின் உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேற கூறியிருக்கிறாராம்.

அவர் எப்படியெல்லாம் பேசினார் தெரியுமா, அதிகாரத்தில் உள்ளவர்களின் வேலை ஆரம்பமாகிவிட்டது என்று தன்னுடைய பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் நடிகை.