ஸ்ரீதேவியாக அவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கப்போகும் சர்ச்சை நாயகி

ஸ்ரீதேவி இறந்த பிறகு எல்லோரும் அவரின் பயோகிராபி படத்தை எடுக்க தான் துடித்து வருகின்றனர், அந்த வகையில் பாலிவுட் நிறுவனம் ஒன்று அவரின் வாழ்க்கை படத்தை எடுக்க முன்வந்துள்ளது.

இந்நிலையில் இவர் வாழ்க்கையில் கடைசி காலங்கள் இன்றும் பல மர்மங்கள் இருந்து வருகின்றது, அவர் கஷ்டத்தில் இருந்தார் என சிலர் சொல்கின்றனர்.

ஒரு சிலர் போனிகபூரால் ஸ்ரீதேவி மிகவும் கஷ்டப்பட்டார் என்று சொல்லி வருகின்றனர், இதுமட்டுமின்றி அவர் மரணமே ஒரு புரியாத புதிராக தான் உள்ளது.

தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கவுள்ளார்கள்,பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஹன்சால் மேத்தா இந்தப் படத்தை இயக்கப் போகிறார். ஸ்ரீதேவி வேடத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.

வித்யா பாலன் ஏற்கனவே தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நாயகி சில்க்கின் வாழ்க்கை வரலாறில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியவர்.

இதனால் இவர் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்தால் மீண்டும் சர்ச்சை எழுமா என்ற அபாயம் உண்டாகியுள்ளது.