தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீவித்யா. இவர் 2006ம் ஆண்டு கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சினிமாவில் ஜொலித்த அவரின் மரணம் ரசிகர்கள் மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களை அதிர்ச்சியடையவைத்தது.
இந்நிலையில் தற்போது ஸ்ரீவித்யா வருமான வரித்துறைக்கு செலுத்தவேண்டிய 45 ரூபாய் பாக்கிக்காக அவரது சொத்துக்கள் தற்போது ஏலத்திற்கு வருகிறது.
சுமார் 1.5 கோடி மதிப்புள்ள ஸ்ரீவித்யாவின் பிளாட்டை ஏலம் விட்டு வரவேண்டிய பாக்கியை வசூலிக்க வருமானவரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.