உத்தமபுத்திரன், மெர்சல் படங்களில் நடித்த சுரேகாவின் கணவர் திடீர் மரணம்

அஜித்தின் விஸ்வாசம், விஜய்யின் மெர்சல், தனுஷின் உத்தமபுத்திரன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் சுரேக்கா வாணி.

அவரது கணவர் சுரேஷ் தேஜா நீண்ட காலமாக உடல் நல குறைவாக இருந்த நிலையில், நேற்று காலமானார்.

கடந்த ஒரு வாரமாக உடல்நிலை மிக மோசமடைந்துள்ளது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது சினிமா துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு சுப்ரிகா என்ற ஒரு மகள் உள்ளார்.