நடிகர் ஆர்யா திருமணம் செய்ய பெண்ணை தேர்ந்தெடுக்க நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கடும் விமர்சனங்களை சந்தித்தது. சமூக வலைத்தளங்களில் ஆர்யாவை கடுமையாக கலைத்தனர்.
ஆர்யா இறுதியில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார். இது மேலும் மீம் கிரியேட்டர்களுக்கு அதிக வசதியாகிபோனது- வறுத்தெடுத்துவிட்டனர்.
இந்நிலையில் நேற்று சந்திரமௌலி இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா கலந்துகொண்டார். அப்போது பேசிய நடிகை வரலட்சுமி “ஆர்யாவை நான் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று மேடையிலேயே கூறினார்.
ஆனால் அவர் வெறும் காமெடிக்காக அப்படி கூறியுள்ளார். வரலக்ஷ்மி நடிகர் விஷாலை காதலித்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.