நான் சினிமாவை விட்டே போகிறேன்: த்ரிஷா அதிரடி

த்ரிஷா சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருப்பவர், இவர் தமிழ் சினிமாவில் கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைவருடனுமே நடித்துவிட்டார்.

இவர் நடிப்பில் விண்ணை தாண்டி வருவாயா, அபியும் நானும், கொடி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.

அந்த வகையில் தற்போது இவர் கர்ஜனை, 96 இது மட்டுமின்றி லேடி ஜேம்ஸ்பாண்டு போலவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

த்ரிஷா தமிழ் சினிமாவில் கமலில் ஆரம்பித்து விஜய் சேதுபதி வரை நடித்து விட்டார்(விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்து வருகின்றார்).

அப்படியிருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கவேண்டும் என்பதே அவரின் விருப்பமாம், அதுமட்டும் இதுநாள் வரை நடக்கவில்லை.

இதுமட்டும் நடந்தால் நான் சினிமாவை விட்டு கூட போய் விடுவேன் என த்ரிஷா ஜாலியாக சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளாராம்.