தெய்வமகள் வாணி போஜனுக்கு சிறு வயதில் பாலியல் தொல்லை – அவரே கூறிய அதிர்ச்சி தகவல்

vani bhojan

வானி போஜனை தமிழகத்தில் தெரியாதவர்களே இல்லை, அந்த அளவிற்கு நம் குடும்பத்தில் ஒருவராக அவர் இருந்து வருகின்றார்.

அந்த வகையில் வானி போஜன் தெய்வமகள் சீரியல் முடிந்து தன் திரை வாழ்க்கையில் அடுத்தக்கட்ட வாய்ப்பிற்காக காத்திருக்கின்றார்.

இந்த நேரத்தில் சமீபத்தில் விகடன் நிறுவனம் பெண்களுக்காக உடைத்து பேசுவோம் என்ற நிகழ்வை நடத்தியது.

இதில் பல பெண்கள் தொடர்ந்து தங்களுக்கு சிறு வயதில் நடந்த இன்னல்கள் குறித்து வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசி வந்தனர்.

அதை தொடர்ந்து இப்போது லட்சுமி ராமகிருஷ்ணன், வானிபோஜன், அதிதி பாலன், சைக்கார்டிஸ் ஷாலினி என பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இதில் வானி போஜன் பேசுகையில் எனக்கு 10 வயது இருக்கும் போது நான் என் தோழி வீட்டிற்கு சென்றேன் அப்போது அவளுடை அப்பா வீட்டின் கதவை மூடினார்.

எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை, அந்த நிலையை இப்போது நினைத்தாலும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தோழியின் அப்பா என்று நம்பி தானே வீட்டில் அனுப்புகிறார்கள், அவர்களும் இப்படியா என கோபமாக வெடித்து பேசினார்.

இதை தொடர்ந்து அனைத்து குழந்தைகளுக்கு எது குட் டச் பேட் டச் என்ற விஷயத்தை கற்று கொடுங்கள் என உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.