காஜல் அகர்வாலுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளை கெளதம் கிச்லு பற்றிய முழு விவரம்

Gautam Kitchlu and Kajal Aggarwal

நடிகை காஜல் அகர்வாலுக்கு 35 வயதாகிறது. அவரது திருமணம் எப்போது என்று தான் ரசிகர்கள் கடந்த பல வருடங்களாக கேட்டு வருகிறார்கள். அது மட்டுமின்றி எப்போது அவர் பேட்டி கொடுத்தாலும் அவரிம் இந்த கேள்வியை நிச்சயம் கேட்டு இருப்பார்கள்.

அதற்கெல்லாம் பதில் கூறும் விதமாக இன்று தனது திருமண செய்தியை அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் காஜல் அகர்வால். மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக காஜல் கூறியுள்ளார். கெளதம் கிச்லு – காஜல் திருமணம் வரும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

“நான் கெளதம் கிச்லுவை திருமணம் செய்யு கொள்ள உள்ளேன் என்ற தகவலை பகிர்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அக்டோபர் 30, 2020 மும்பையில் எளிமையாக குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் திருமணம் நடைபெற உள்ளது. இத்தனை வருடங்களாக தொடர்ந்து நீங்க அளித்து வரும் அன்புக்கு நன்றி. நான் தொடர்ந்து என்னுடைய ரசிகர்களை entertain செய்ய உள்ளேன்” என கூறி உள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்பதை காஜல் தற்போது உறுதியாக கூறி உள்ளார். அவரது வருங்கால கணவர் கெளதம் கிச்லு மும்பையில் வசித்து வரும் பிரபல தொழிலதிபர். அவர் Discern Living என்ற இன்டீரியர் டிசைனிங் கம்பெனியை நடத்தி வருகிறார். அதற்க்கு முன்பு அவர் 2011ல் Fab Furnish என்ற ஆன்லைன் furniture ரீடெயில் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

கெளதம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்டீரியர் டிசைனிங் பற்றி பல்வேறு புகைப்படங்களை அதிகம் பதிவிட்டு இருக்கிறார். அவ்வப்போது அவர் மாரத்தான் ஓடியிருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவர் அதன் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது உறுதியாக தெரிகிறது.