எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பட்டு தொட்டியெல்லாம் ரீச் ஆகி வருகின்றது. இலங்கையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு ஆதரவு என பல சர்ச்சைகள் சென்று வருகின்றது.
சரி என்ன தான் இந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்றால் பல நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆர்யாவிற்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைப்பது தான் இந்த நிகழ்ச்சி.
இந்நிலையில் நடிகை கஸ்தூரியிடம் சமீபத்தில் ஒருவர் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைக்குறீர்கள் என கேட்டார், அதற்கு பதிலளித்த அவர், என் வீட்டில் டிவி இல்லை” என பதிலளித்தார்.
தற்போது இன்று தான் டிவி கனெக்ஷன் வாங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் இப்போது ஒரு நான்சென்ஸ் நிகழ்ச்சியை பார்த்தேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் ஆர்யாவின் நிகழ்ச்சியைத்தான் இப்படி விமர்சித்துள்ளார் என பலரும் கூறிவருகின்றனர். மேலும் கஸ்தூரி எப்போதும் எந்த ஒரு பதிலையும் வெளிப்படையாகவே கூறிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.