அஜித்தை உதைக்க வேண்டும் முன்னணி பிரலம் ஏற்படுத்திய சர்ச்சை, ரசிகர்கள் கோபம்

அஜித் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர், இவருக்கு ஒன்று என்றால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா…

அவரை ஒரு வார்த்தை பேசினார் ஏண்டா பேசினோம் என்று நினைக்கும் அளவிற்கு ரசிகர்கள் செய்து விடுவார்கள்.

அந்த வகையில் அஜித் என்றுமே தன் ரசிகர்களை தன் சுய நலத்திற்காக பயன்படுத்தியது இல்லை, முதலில் உங்கள் குடும்பங்களை பாருங்கள் என்று தான் சொல்வார்.

தன் ரசிகர்கள் நலனுக்காக கூட ரசிகர் மன்றத்தையே கலைத்தவர், அப்படிப்பட்டவரை ஒருவர் இப்படி சொன்னால் சர்ச்சை ஆகாமல் இருக்குமா?.

ஆனால், அஜித்தை அப்படி சொன்னவர் சினிமா பிரபலம் இல்லை, அவர் ஒரு அரசியல் பிரபலம், அவர் அஜித்தை உரிமையாக கூட அப்படி சொல்லியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சரி அது இருக்கட்டும் யார், என்ன சொன்னார்கள் என்று தானே கேட்க வருகிறீர்கள், அது வேறு ஒன்றுமில்லை, அரசியல் களத்தில் அவ்வபோது சர்ச்சை பேச்சை வெளியிடுபவர் நாஞ்சில் சம்பத்.

இவர் சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது அஜித்தின் ஒரு படத்தை பார்த்தேன்.

அதை பார்த்து முடித்த பிறகு அஜித்தை உதைக்க வேண்டும் என்று போல் இருந்தது என அவர் சிரித்துக்கொண்டே ஜாலியாக தான் சொன்னார்.

அவர் ஜாலியாக சொன்னாலும் ரசிகர்கள் அதை ஜாலியாக எடுத்துக்க முடியுமா, அவரை எப்படி இந்த மாதிரி சொல்லலாம் என பொங்கி வருகின்றனர்.