இவர்தான் தல, கிரிக்கெட்டின் கடவுள்.. தோனி பற்றி பிரபலங்கள் நெகிழ்ச்சியான ட்வீட்

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த போட்டியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 26 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி 3 சிக்ஸ், 1 பௌண்டரி மற்றும் 2 ரன்கள் என 5 பந்தில் 24 ரன்கள் குவித்தார்.

இருப்பினும் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாததால் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. கடைசி வரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்விட்டரில் பேசி வருகின்றனர்.

இது தோல்வியே அல்ல என வெங்கட் பிரபு கூறியுள்ளார். மேலும் தோனி தான் கிரிக்கெட்டின் கடவுள் என காலா பட நடிகை ஹுமா குரேஷி ட்விட் செய்துள்ளார்.