எங்க சாதிக்காரங்களும் உழைச்சிருக்காங்க: காலா படத்திற்காக காட்டமாக பேசிய பிரபல எடிட்டர்

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் காலா பற்றிய பேச்சு தான். அரசியல் கருத்துக்கள் சொன்னாலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.

இந்நிலையில் இந்த படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் புகழ்ந்து பேசிய பாடகர் அருண்ராஜா காமராஜ் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர், இசை மற்றும் சில துறைகள் பற்றி பேசியிருந்தார். ஆனால் அவர் எடிட்டர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

அதை பார்த்த பிரபல எடிட்டர் ரூபன் “எங்க சாதிக்காரங்களும் உழைச்சிருக்காங்க” என காட்டமாக பதிவிட்டார்.
சாதி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த பிறகு ரூபன் தான் எடிட்டர்கள் பற்றி மட்டும் தான் பேசினேன், அப்படி சொன்னதுக்கு மன்னிப்புகள் என கூறி விளக்கம் அளித்தார்.