கார்த்திக் நரேனிடம் மன்னிப்பு கேட்ட கௌதம் மேனன்! அதிரடி அறிக்கை

கௌதம் மேனன், கார்த்திக் நரேன் பஞ்சாயத்து தான் கடந்த இரண்டு நாட்களாக டுவிட்டரில் பற்றி எரிகின்றது, இதில் கௌதம் தன்னை ஏமாற்றிவிட்டதாக கார்த்திக் நரேன் ஒரு டுவிட் செய்திருந்தார்.

இதனால் இரண்டு பேருக்கும் இடையில் பிரச்சனை இருப்பது வெளி உலகக்கு தெரியவந்தது. கவுதம் மேனன் உண்மை முகம் இதுதான் என்று பல திரையுலக பிரமுகர்களும் பேசஆரம்பித்தனர். செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படமும் கவுதம் மேனோனால் தான் வெளிவராமல் இருக்கிறது என்று சம்மந்தப்பட்ட படக்குழுவில் ஒருத்தரே பேசினார்.

அதன் பின் அரவிந்த் சுவாமியும் கவுதம் மேனனுக்கு எதிராக இன்று ஒரு ட்வீட் போட்டுருந்தார். இதனால் இந்த பிரச்சனை பெருசானது. இந்நிலையில் தற்போது கவுதம் மேனன் இரன்டு பக்கத்தில் அவரது விளக்கத்தை அறிக்கையாக கொடுத்துள்ளார்.

அதில் நரகாசூரன் படம் வெளிவர பல பாசிட்டிவான விஷயங்கள் நடந்து வரும் வேளையில் கார்த்திக் போட்டிருந்த ட்வீட் என்னை மிகவும் காயப்படுத்தியது. இதனால் மீடியா நண்பர்கள் பலரும் என்னை தொடர்புகொண்டு கேட்டது என்னை மிகவும் வருத்தப்படவைத்தது, நானும் அவரின் ட்வீட் க்கு பதில் ட்வீட் பதிவிட்டிருக்க கூடாது, அதற்காக நான் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் கார்த்திக்கும் அந்தமாதிரி ட்வீட் எண்னிடம் பேசாமல் பதிவிட்டிருக்க கூடாது.

நரகாசூரன் படத்துக்காக கார்த்திக் கேட்டது அனைத்தும் செய்து கொடுத்தோம், கார்த்திக் உருவாக்கிய கதையில் ஒரு படைப்பாளியாக நான் தலையிடவே இல்லை.அவர் கேட்ட அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களை கூட யோசிக்காமல் கமிட் செய்தோம்.

இந்த படத்துக்காக பங்குதாரர் மூலம் பல கோடி பணத்தை முதலீடு செய்துள்ளோம். சில தவறான புரிதலால் கார்த்திக்கின் கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கார்த்திக் இந்த படத்தை விட்டு என்னை போக சொன்னாலும் சந்தோசமாக செல்கிறேன்.

இது எங்களுக்குள் பேசித்தீர்க்கவேண்டிய சின்ன விஷயம் தான் இந்த தவறான புரிதல் எங்களுக்குள் சரியாகும். மிகவிரைவில் நரகாசூரன் படம் வெளிவருவதற்க்கான வேலைகள் நடந்து வருகிறது கூடிய விரைவில் வெள்ளித்திரையில் நரகாசூரன் பார்க்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.