இப்படி ஏமாற்றிவிட்டீர்களே, கௌதம் மேனனை வெளுத்து வாங்கிய கார்த்திக் நரேன் வெடித்த சண்டை

தமிழ் சினிமாவில் எப்போதும் ஹீரோக்களுக்கிடையே தான் சண்டை இருக்கும், வசனங்களில் மூலம் தங்கள் படங்களில் மோதிக்கொள்வார்கள்.

ஆனால், தற்போதெல்லாம் இயக்குனர்களுக்கு இடையேயும் சண்டை முற்ற ஆரம்பித்துவிட்டது, அதிலும் டுவிட்டரில் ஒருவரை ஒருவர் திட்டும் நிலைக்கு வந்து விட்டனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் வெற்றி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தவர் கார்த்திக் நரேன். இவரின் முதல் படமான துருவங்கள் 16 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கார்த்திக் நரேன் தற்போது நரகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் போட்டுள்ள பதிவு தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. “ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள், என அவர் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி இயக்குனர் கவுதம் மேனன் பதிவிட்ட பிறகு தான் தெரிந்தது கார்த்திக் நரேன் பதிவிட்டது இவரை பற்றிதான் என்று. இருவரும் தற்போது மாறி மாறி ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பலர் என்னிடம் கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் குப்பை போல நடத்தினீர்கள். தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள் என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.