இந்தியாவிற்கே பெருமை சேர்த்த மாதவனின் மகன்

திரையுலகில் பேன் இந்தியா நடிகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் ஒரு சிலர் தான், அந்த வகையில் மாதவன் தமிழ், ஹிந்தி என கலக்கி வரும் நடிகர்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த இறுதிச்சுற்று, விக்ரம் வேதா ஆகிய இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் தாண்டி விமர்சனங்கள் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது காமென்வெல்த் போட்டிகள் நடந்து வர, அதில் இந்தியா சார்பில் வீரர்கள் தங்ககளை அள்ளி வருகின்றனர்.

இந்த நேரத்தில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுள்ளார்.

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

இந்த தகவலை மாதவன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் பதிவை பார்த்த பிரபலங்களும் மாதவன் மகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.